×

மனவெளிப் பயணம்

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி

சமூக ஊடகம் சமூக ஊடகம் எனும் மாயவலை!

Cyber Relationship Addiction

நம் இந்திய சமூகம் என்பது தந்தைவழி சமூகம். இதில் குடும்பம் என்பது ஒரு மிகப்பெரிய மதிக்கத் தகுந்ததாக இருக்க வேண்டும் என்பதே பலரின் பேராசையாக இருக்கிறது. அப்படிப்பட்ட சமூகத்தில் இந்த சோசியல் நெட் ஒர்கிங் வெப்சைட்ஸ் என்று வந்ததோ அதில் இருந்து பெண்களுக்கான வன்முறையும், ஆண்களுக்கான விரோதமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. பேசுதல் என்பது மனிதர்களுக்கான அத்தியாவசிய தேவைகளுள் ஒன்று. அதுவும் விதம் விதமான மனிதர்களுடன் பேசும் போது, இன்னும் ஆசைகள் பெருகும். அதன் படி மனிதன் எங்கு நாளும், எப்படி நாளும் பேசலாம் என்ற ஒரு வரைமுறை இல்லாத ஒரு சுதந்திரத்தை இன்டர்நெட் கொடுத்து விட்டது. அதன்படி எஸ்.எம்.எஸ், வீடியோ சேட், சாட்டிங் ரூம்ஸ் இப்படி நாடு முழுக்க யார் கூடவும் பேசலாம் என்ற சுதந்திரம் இருக்கிறது.

வரைமுறை இல்லாத பேச்சு என்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை தற்போது கண் கூடாக பார்க்கிறோம். சைபர் ரிலேட்சன்ஷிப் அடிக்சன் என்பது தற்போதைய மன நோயின் ஒரு முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஆண்/பெண் பாரபட்சம் இல்லாமல் விதம் விதமாக மனித மனங்களை குரூரமாக வேட்டையாடுகின்றனர். இதன் பாதிப்பில் இருப்பவர்களை சைபர் விக்டிம் கவுன்சிலிங் ஒரு தன்னார்வ அமைப்பில் 35% மக்கள் கம்பளைண்ட் செய்துள்ளார்கள் என்றும், 46% மக்கள் கம்பளைண்ட் செய்யவில்லை என்றும், 18.3% மக்கள் சைபர் ரிலேட்சன்ஷிப் அடிக்சன் பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள் என்றும் ஒரு ஆய்வு செய்துள்ளார்கள்.

என்ன மாதிரி எல்லாம் ஸ்டாக்கர்ஸ் மனிதர்களை குறி வைக்கிறார்கள் என்று ஸ்டாக்கர்ஸ் மூன்று விதமாக பிரிக்கிறார்கள்.

1. Obsessional Stalkers: 47% மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சென்டர் ஆப் டிசீஸ் கண்ட்ரோல் அறிக்கையின் படி, ஆறில் ஒரு பெண்ணும், பதினேழு ஆண்களில் ஒரு ஆண் என்று பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கின்றனர்.

2. Obsessive Love Stalkers: 43% மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அவர்களின் துணையால் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறவர்கள்தான் அதிகமாக இருக்கின்றனர். அதனால் தங்களுடைய நேர்மையான குணத்துக்கு கிடைத்த அவமானமாக பார்க்கிறார்கள். அதுவே அவர்களை வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்கிறது.

3. Erotomanic Stalkers: 10% மக்கள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அவர்களுக்கு தங்களுடைய விசித்திரமான மாயை (Eccentric Delusion) தான் உண்மை என்று நம்புகின்றனர். அவர்களின் 1996 Journal of the American Academy of Psychiatry and the Law இந்த பத்திரிக்கை வெளியிட்ட கட்டுரையின் படி இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சைக்கோ அல்லது நார்மல் என மனிதர்கள் எல்லாவகையிலும் இருக்கிறார்கள். யார் என்று பிரித்தறிவது கடினமான ஒன்றாக இருக்கும். இப்படி மூன்று வகையில் சைபர் ரிலேசன்ஷிப் அடிக்ஷனில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

Obsessive online gambling & Trading

மேலதிகார அதிகாரியின் ஆதிக்கம், தனிப்பட்ட நபர்களின் பணம் சார்ந்த விஷயங்கள், ரொம்ப கஷ்டப்படாமல் எளிதாக சம்பாதிக்கும் முறை, வீட்டில் இருந்தே எளிதாக கஸ்டமரில் இருந்து பணம் வாங்குவது வரை அனைத்துமே ரொம்ப சுலபம். அதனால் ஒரு பிஸ்னஸ் ஆரம்பிக்கலாம் என்ற பெயரில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வில் இருந்து சுற்றுச்சூழல் பாதிப்பு, இந்தியாவின் வறுமை ஒழிப்பு, மதங்கள் பற்றிய கருத்துகள், விதம் விதமான இடங்களுக்கு அழைத்து செல்லுதல் என மக்களின் கருணையையும், பிரமிப்பையும் ஒரே நேரத்தில் செய்யும் போது எளிதாக அந்த மார்க்கெட் தளத்தில் குவிந்து விடுவார்கள். இதில் நிரந்தரமாக எந்த அளவிற்கு பணத்தை சம்பாதிக்க முடியுமோ அந்த அளவுக்கு சம்பாதிக்கலாம் என்ற வெற்று நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கிறது.

The Information Broadcast Ministry Department கொடுத்த தகவலின்படி இன்டர்நெட்டில் வெளிவரும் பொய்யான விளம்பரங்கள், பிரமிக்க வைக்கும் வாய்ப்புகள், எளிதாக சில மணி நேரத்தில் சம்பாதிக்க முடியும் என்ற வெற்று தகவல்கள் எல்லாமே அதிகமான சைபர் சூதாட்டங்கள் நடைபெறுகிறது என்கிறார்கள்.பப்ளிக் ஹெல்த் டிப்பார்ட்மென்டில் இருந்து 18 வயதில் இருந்து 75 வயதுள்ளவர்கள் வரை ஒரு சர்வே எடுத்து இருக்கிறார்கள். சைபர் கேம்பளிங் மற்றும் டிரேடிங் செய்வதால் இவர்களுக்கு ஹைப்பர் எஸஸ்சிவ் டிஸார்டர் இருப்பதாக கூறியுள்ளார்கள். டிரேடிங்கில் 22.9% மக்கள் தொடர்ந்து இன்வெஸ்ட் செய்பவர்களாக இருக்கிறார்கள்.

National Centre for Youth Substance Use Research இதில் சிலர் 2-3 மணி நேரங்கள் ஆன்லைன் விளையாட்டு, பெட் கட்டி விளையாடுவது என்றிருக்கிறார்கள். அதன் பாதிப்பால் 50% மக்கள் ஒரு சில நேரங்களில் பெரும்பாலான பணத்தை இழந்து விடுகிறார்கள். இதில் ஏற்படும் அதிர்ச்சியும், குதூகல மனநிலையும் முற்றிலும் அவர்களை வாழ்நாள் முழுக்க மனப்பாதிப்பை ஏற்படுத்துவதாக
கூறியிருக்கிறது இந்த அமைப்பு.

Compulsive & Over Excessive Web Surfing or Database searches

உடல் உழைப்பில் இருந்து கொஞ்சம் விடுதலை பெற்று அறிவு சார்ந்த சமூகமாக மாறி விட்டோம் என்பதில் கர்வம்தான் இருக்கிறது. ஆனால் அந்த அறிவே மிகுந்த அழுத்தத்தை தருமானால் என்ன செய்வது. கற்றல் என்பதை விட, யாருக்கு அதிக தகவல் தெரிந்திருக்கிறது என்பதற்கு மிகப்பெரிய போட்டியே நடக்கிறது. அது வெறும் சேனல் சார்ந்து மட்டுமில்லை. யார் முதல் முதலில் சரியான தகவலை கொடுக்க போகிறோம் என்ற போட்டி சோசியல் மீடியாவில் நடக்கிறது. அதற்காக மனிதர்களின் அடிப்படை தேவைகளைப் பற்றிய தகவல்களை விட, மற்ற தகவல்களை வெளிப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

Cyberchondria ஆன்லைனில் அளவுக்கு அதிகமாக மெடிக்கல் சம்பந்தமான தகவல்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள் அல்லது பயத்தினால் அடிக்கடி தகவல்களை தேடுகிறார்கள். பெரும்பாலும் ஆர்வக்கோளாறால் இன்டர்நெட்டில் தேடிப் படிக்கிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு அளவுக்கு அதிகமான பயத்தை தந்து விடுகிறது. சைபர்காண்ட்ரியா பெரும்பாலும் ஒசிடியாக மாறிவிடுகிறது.

இந்த நான்கின் காரணங்களால் மனிதர்களை மிகவும் அடம்பிடிக்கும் அடிமைகளாக மனதளவில் இன்டர்நெட் மாற்றியிருக்கிறது என்று கூறுகிறார்கள். சினிமா மற்றும் சோசியல் மீடியாவின் தாக்கத்தால் வேலைக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை குறைவாகவும், தம்பதியர்களிடையே விவாகரத்து அதிகமாவதும், வாழ்க்கையை அனுபவிக்கவில்லை என்ற ஏக்கமும் அதிகமாகி விட்டது. இனி வரும் காலகட்டத்தில் இன்டர்நெட் அடிக்சனுக்கு சிகிச்சை எடுக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்றே இந்த ஆய்வுகள் நமக்கு நிரூபிக்கிறது.

The post மனவெளிப் பயணம் appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Gayathri Mahathi ,Dinakaran ,
× RELATED டூர் கிளம்புறீங்களா?